தெம்பனீஸில் சாலையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆடவர் மரணம்

Shinmin Daily News and Google Maps

தனிநபர் நடமாட்ட சாதனத்தில் முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது, ​​மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

கடந்த நவ. 17ஆம் தேதி அன்று இரவு 11 மணியளவில், பிளாக் 827க்கு முன்னால், தெம்பனீஸ் அவென்யூ 3இல் இந்த விபத்து ஏற்பட்டது.

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் விமானங்கள்: பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேற்றம்

விபத்தில் சிக்கிய யூசோஃப் என்று அழைக்கப்படும் 72 வயதான முதியவர் தனது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என ஷின்மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

முதியவர் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், விபத்து நடந்த மறுநாள் நவம்பர் 18 அன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 17 அன்று இரவு 11:16 மணியளவில், மோட்டார் சைக்கிள் மற்றும் நடமாட்ட சாதனம் இடையே, தெம்பனீஸ் அவென்யூ 3இல் நடந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் விடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் போலீஸ் படை மதர்ஷிப்பிடம் தெரிவித்தது.

அந்த முதியவரும், மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து வந்த 20 வயது பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

“கால்நடைகளை போல லாரிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் பயணம், ஒரு தசாப்த கால பிரச்சினை” – லாரிகளுக்கு மாற்றாக மினிபேருந்து இருக்குமா?