தெம்பனிஸ் காபி கடை ஒன்றில் பெரிய விசிறி கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்து..!

Tampines ceiling fan drop injures
(Photos: Ang Bee Tin/FB and 家在新加坡 Singapore Our Home/FB)

தெம்பனிஸ் காபி கடை ஒன்றில் ஒரு பெரிய விசிறி மற்றொரு பொருளின் மீது தாக்கி கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

நேற்று அக்டோபர் 28ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும், சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு.

இந்த சம்பவம் தொடர்பான சமூக ஊடக பதிவுகளின்படி,  அருகில் இருந்த  ஒரு ஏணியை விசிறி தாக்கியதாகவும், பின்னர் அதன் சிதைவுகள் விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு ஏணியை பயன்படுத்தி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததாவும், அச்சமயம் அந்த ஏணியின் மீது மின் விசிறி பட்டு இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் சம்பவத்தின் புகைப்படங்களை எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

நேற்று இரவு 7.10 மணியளவில் பிளாக் 201D தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 21இல் உதவி கோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களை சாங்கி பொது மருத்துவமனைக்கு SCDF அனுப்பி வைத்தது.

சிங்கப்பூரில் வேலை அனுமதி பெற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு.

தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லலாம்.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…