சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டபோதே மூடியிருக்க வேண்டும் – டான் செங் போக்..!

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் COVID-19 பரவல் சூழலில் போது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் குறை கூறியுள்ளார்.

முதன்முதலாக இந்த தொற்று விடுதிகளில் உறுதிப்படுத்தப்பட்ட போதே அதனை உடனடியாக மூடி இருக்க வேண்டும் என்றும், இந்த தொற்று பரவும் வேகத்தை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 384 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 முற்றிலும் இல்லை..!

மேலும் தான் ஒரு மருத்துவர் என்றும் , விடுதிகளில் தொற்று பிரச்சினை என்று தெரிந்தவுடன் அதன் செயல்பாடுகளை நிறுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாததாக குறிப்பிட்ட அவர், விடுதி உடனடியாக மூடப்படாத காரணத்தால் அனைவரும் தற்போது பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதில் தொற்று பாதித்த நபர்களை தனித்தனியாக அடையாளம் காண்பது கடினம், ஆனால் தொற்றைக் கையாள அடிப்படை அணுகுமுறையை பயன்படுத்திருக்க கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலில் புதிதாக 26 இடங்கள் சேர்ப்பு – சுகாதார அமைச்சகம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg