ஜனவரி-செப்டம்பர் இடையில் Work permit பெற்ற 98 வெளிநாட்டு ஊழியர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதி

(Photo: MOM)

புதிய ஏற்பாட்டின்கீழ், work permit அனுமதி பெற்ற 98 ஊழியர்கள், இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு இடையில் மனநலக் மருத்துவமனையில் (IMH) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய ஏற்பாடானது மிகவும் கடுமையான சம்பவங்களுக்கு தேவைப்படும்போது சரியான நேரத்தில் கவனிப்பை வழங்குகிறது.

“தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயணம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்”

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) நாடாளுமன்ற கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இதனை தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக இருந்தாலும், தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பதாக டாக்டர் டான் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்ல வாரத்திற்கு 500 லிருந்து 3,000 என எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், நடமாட்ட கட்டுப்பாடுகளை கவனமாவும் மேலும் கணிப்பீட்டு முறையிலும் செய்யப்பட வேண்டும், என்றார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு…