தஞ்சோங் பகார் விபத்து: காதலனை காப்பாற்ற முயன்று தீயில் சிக்கிய பெண் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்

tanjong pagar accident
(Photo Credit: TODAY)

தஞ்சோங் பகார் (Tanjong Pagar) சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் பலியான 5 பேருக்கு உதவ முயன்ற பெண் தற்போது சீராக இருப்பதாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) தெரிவித்துள்ளது.

அந்த பெண் தற்போது அதிக கவனிப்பு வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனை கூறியுள்ளது.

துவாஸ் பகுதியில் தீ – 8 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

அந்த பெண் யார் என்பதை தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அடையாளம் கண்டு குறிப்பிட்டது. ரெய்பே ஓ சீவ் ஹூய் (Raybe Oh Siew Huey) என்ற அந்த பெண் (வயது 26), விபத்தில் இறந்த கார் ஓட்டுனரை திருமணம் செய்யவிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

விபத்தில் பொது அந்த பெண் தன்னுடைய காதலனை காப்பாற்ற காரின் கதவைத் திறக்க முயன்றார் என்றும், அதனால் அவரது உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு SGHஇல் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த நான்கு 4 பயணிகளும் உயிரிழந்தனர்.

சிங்கப்பூரில் 100வது ஆண்டை நிறைவு செய்யும் உணவகம் – வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இலவச பிரியாணி!