காதலியின் தாய்க்கு சொந்தமான கிரெடிட் கார்டை பயன்படுத்தி S$8,000 செலவு செய்த ஆடவர் – நன்னடத்தை கண்காணிப்பு

டீனேஜ் ஆடவர் ஒருவர் தனது காதலியின் தாய்க்கு சொந்தமான கிரெடிட் கார்டை ரகசியமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த அட்டையை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் ஆடைகள் வாங்கியது, உணவு மற்றும் பிரார்த்தனை சிலைகள் என சுமார் S$8,000 செலவு செய்ததை அடுத்து அது தெரியவந்தது.

கிட்டத்தட்ட 700 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – Giant அதிரடி

19 வயதான அந்த ஆடவர் மீது இன்று திங்கள்கிழமை (அக்டோபர் 18) மோசடி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு, 18 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்பட்டது.

மேலும், ஐந்து குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில குற்றங்களின் போது அவர் 18 வயதிற்குட்பட்டவராக இருந்ததால் அவரின் பெயரை குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், அந்த ஆடவர் தனது காதலியின் வீட்டிற்குச் சென்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவர் தனது காதலியின் தாயின் கிரெடிட் கார்டை ஒரு அறையில் பார்த்தார், அதில் உள்ள தகவல்களை குறித்து கொண்டார்.

பின்னர், அவர் பிப்ரவரி 24, 2020 முதல் கார்டைப் பயன்படுத்தத் தொடங்கினார், முதலில் S$555 மதிப்புள்ள பிரார்த்தனை சிலைகளை ஆன்லைன் போர்டல் Taobao இலிருந்து வாங்கினார்.

அடுத்த சில நாட்களில், அவர் கார்டைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கானவற்றைச் செலவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண ஏற்பாட்டில் யார் யார் தகுதி பெறுவர்?