மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் 4வது முறையாக இலவச விநியோகம்!

Singapore Temasek Free Mask
Singapore Temasek Free Mask (Photo: Joshua Lee)

சிங்கப்பூரில் Temasek அறக்கட்டளை மறுமுறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை மீண்டும் இலவசமாக விநியோகம் செய்யவுள்ளன.

அதாவது நான்காவது முறையாக அந்த தொண்டு நிறுவனத்தினால் இலவச முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

PIE மேம்பாலம் விழுந்த சம்பவம்: 11 வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக குற்றம் நிரூபணம்!

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு தழுவிய முறையில் முகக்கவசங்கள் விநியோகம் நடந்து வருகிறது.

Temasek அறக்கட்டளையின் முகநூல் பக்கத்தின்படி, நான்காவது முறையாக முகக்கவசங்களை வரும் மார்ச் மாதம் விநியோகம் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதே போல வரும் ஏப்ரல் மாதத்தில் கை சுத்திகரிப்பு திரவமும் (Hand sanitiser) விநியோகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு பெற்றதை போலவே, குடியிருப்பாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க ஆல்கஹால் இல்லா அந்த கை சுத்திகரிப்பு திரவங்களை பெற்றுக்கொள்ள தங்கள் சொந்த பாட்டில்களைக் கொண்டு வரும்படி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று!