MaskPure™ AIR+ முகக்கவசத்தை எப்படி பயன்படுத்துவது? எப்படி துவைப்பது?- விரிவான தகவல்!

Photo: Temasek Foundation

சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர்வாசிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தலா ஒன்று வீதம் MaskPure™ AIR+ என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும் என்று தெமாசெக் அறக்கட்டளை (Temasek Foundation) அறிவித்துள்ளது. இந்த முகக்கவசம் விநியோகம் வரும் ஜனவரி 10- ஆம் தேதி அன்று காலை 10.00 AM மணிக்கு தொடங்கி, வரும் ஜனவரி 23- ஆம் தேதி அன்று இரவு 11.59 PM மணி வரை நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய கடற்படைத் தளபதிக்கு சிங்கப்பூரின் உயரிய விருது வழங்கப்பட்டது!

MaskPure™ AIR+ முகக்கவசத்தை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து பார்ப்போம்!

1.முகக்கவசத்தை அணிவதற்கு முன்பும், பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.

2. இடது பக்கத்திலுள்ள சின்னம் வெளிப்புறமாக இருக்க வேண்டும்.

3. முகக்கவசம் சரியாகப் பொருந்தும் வகையில் இணைப்பானைச் சரி செய்யுங்கள்.

4.மூக்குப்பகுதியில் உள்ள பஞ்சை மூக்குத் தண்டின் மீது அழுத்துங்கள்.

5. மூக்கு, வாய், தாடை அனைத்தையும் முழுமையாக மூடும் வகையில் முகக்கவசத்தை விரித்திடுங்கள்.

தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு அரசாங்க நிதி: சிங்கப்பூரில் 296 நோயாளிகள் தகுதி – நிதி உதவி எவ்ளோ தெரியுமா?

முகக்கவசத்தை எப்படி துவைப்பது? என்பது குறித்து பார்ப்போம்!

1.ஒரு நிமிடம் குளிர்ந்த நீரில் மெல்ல அலசுங்கள்.

2. தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது.

3.வெளுப்பு மருந்து (ப்ளீச்) அல்லது சவர்க்காரம் பயன்படுத்தக் கூடாது.

4. முகக்கவசத்தை தேய்க்கவோ, பிழியவோ அல்லது திருகவோ கூடாது.

5. உட்புறத்தில் நீர் சொட்டக் காய வையுங்கள்.

6. முகக்கவசத்தை அதிகபட்சம் 30 முறை துவைக்கலாம். (வாரத்தில் ஒருமுறை அல்லது அழுக்காகும் போது)

7. நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி 30 முறை துவைக்கும் வரை நீடித்திருக்கும்.