சிங்கப்பூரில் அதிகரிக்கும் வெப்பநிலை: கட்டுமான ஊழியர்கள் அதிகம் பாதிப்படையலாம்!

lightning strike 3 construction workers hospital
Pic: Getty Images

சிங்கப்பூரின் சராசரி வெப்பநிலை 1980 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை, 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதாக தேசிய பருவநிலை மாற்றத்துக்கான செயலகம் தெரிவித்துள்ளது.

இதனால், வரப்போகும் ஆண்டுகளில் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்பதால், நாட்டினை குளிர்ச்சியாக வைத்திருக்க சிங்கப்பூர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வெப்பநிலை மாற்றம் காரணமாக சிலருக்கு சுகாதார ரீதியாகவோ அல்லது மற்ற வழிகளிலோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது.!

சிங்கப்பூரில் வெப்பநிலை அதிகரிப்பால் வெயிலில் வேலை செய்பவர்கள், கட்டுமான ஊழியர்கள் அல்லது உடல் வலிமை குறைந்தவர்கள் அதிகம் பாதிப்படையலாம்.

அதிக வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்கு வெப்பம் சார்ந்த காயம் ஏற்படக்கூடும் என சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஜேசன் லீ கூறியுள்ளார்.

வேலையிடத்தில் அல்லது தனிப்பட்ட விதத்தில் வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஐந்து வரை சென்றுள்ளது என மனிதவள அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

உடலின் வெப்பநிலைக்கும், சுற்றுப்புறத்தின் வெப்பநிலைக்கும் உள்ள வேறுபாடு குறையும்போது, அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க மேலும் பல வழிமுறைகளை கண்டறிவது முக்கியமாகும்.

மேலும், வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல் அழுத்தத்தைக் கண்காணிக்க, உணர்கருவிகளை அணிந்துகொண்டு ஊழியர்கள் வேலை பார்க்கலாம் என இணைப் பேராசிரியர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாடகை தொடர்ந்து ஏற்றம்!