தைப்பூசம் திருவிழா: ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்!

Photo: Minister Tan See Leng Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 15 டேங்க் சாலையில் (15 Tank Road) அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple). தைப்பூசத்தையொட்டி, பிப்ரவரி 5- ஆம் தேதி அன்று இந்த கோயிலில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

அரசுப் பள்ளிகளின் முதல்வர்களைப் பயிற்சிக்காக சிங்கப்பூருக்கு அனுப்பிய பஞ்சாப் அரசு!

பிப்ரவரி 4- ஆம் தேதி அன்று நள்ளிரவு முதலே சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் உடன் நடைப்பயணமாக, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Photo: Minister Tan See Leng Official Facebook Page

இந்த நிலையில், சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng, Ministry Of Manpower, Singapore), ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சருடன் தஞ்சோங் பகார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

சிங்கப்பூர் வானிலை – மழை பெய்யும் அதேசமயம் சூடாக இருக்கும்… வானிலை மையத்தின் முன்னறிவிப்பு!

அதைத் தொடர்ந்து, பால் குடங்கள், காவடிகளைப் பக்தர்கள் தயார் செய்வதை சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங் நேரில் பார்வையிட்டார். மேலும், பக்தர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார்.

பின்னர், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர், பால்குடத்தை தலையில் வைத்துக் கொண்ட அமைச்சர் டான் சீ லெங், பேருந்தில் ஏறி பயணம் செய்து, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு சென்று பால்குடக் காணிக்கையைச் செலுத்தி வழிப்பட்டார். சிங்கப்பூர் அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இறந்த பாட்டியை நினைத்து வாடும் பேரன்… பாட்டியைக் காண Google Mapsஐ நாடுவதாக TikTokஇல் வெளியிட்ட வீடியோ வைரல்!!

இது குறித்து சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தைப்பூச நல்வாழ்த்துக்கள்! இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டது பெருமையாக இருந்தது. காவடிகளையும், பால் குடங்களையும் எடுக்கும் போது, பக்தர்களின் உற்சாகத்தை என்னால் உணர முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.