சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா – முக்கிய விதிமுறைகள்…!

Festival of Thaipusam

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். மேலும், தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும், இதில் முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.

இந்த ஆண்டின் தைப்பூசம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூச ஊர்வலம் வெள்ளிக்கிழமை பிப்ரவரி., 7ந்
தேதி இரவு 11.30 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து தொடங்குகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா – டிக்கெட் எங்கே பெறலாம்.??

மேலும், பால்குடம் எடுத்து செல்லும் மிக நெரிசலான நேரம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை. அந்நேரத்தை தவிர்ப்பது நல்லது, நெரிசலான நேரத்தில் வந்தால் காத்திருக்க வேண்டியிருக்கும்.

கூடுதல் விவரங்கள்:

  • நெரிசலான நேரங்களில் பெருமாள் கோயிலில் இட வசதி குறைவு, ஆகையால் வீட்டிலேயே பால் குடங்களை தயார் செய்து வாருங்கள்.
  • 7ம் தேதி காலை 9 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 3 மணிவரை ரேஸ் கோர்ஸ் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.
  • காவடி எடுக்கும் பக்தர்கள் ரேஸ் கோர்ஸ் சாலையில் 8ம் தேதி அதிகாலை 3மணி முதல் தங்கள் காவடிகளை இறக்கலாம்.
  • காவடிகள் உள்ளே வருவது பெருமாள் கோயில் கேட் -2 (Gate 2) வழியாக மட்டுமே.
  • தைப்பூசத்தன்று பெருமாள் கோயிலிலிருந்து மாலை 5 மணிக்குள் அனைத்து பால் குடங்களும் மற்றும் காவடிகளும் வெளியேறிவிட வேண்டும்.
  • அனைத்து பக்தர்களும் காணிக்கைகளுடன் இரவு 11 மணிக்குள் ஸ்ரீ‌ தெண்டாயுதபாணி கோயிலை அடைந்துவிட வேண்டும்.
  • எந்த ஒரு பக்தரும் ஊர்வல பாதையில் புகை பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, ஊர்வலப் பாதையில் இருந்து வெளியெற்றப்படுவார்கள்
  • காவடிகளுடன் செல்லும் பதிவு செய்யப்பட்ட பஜனைக் குழுக்கள் கையில் எடுத்துச் செல்லக்கூடிய இசைக் கருவிகளுடன் ஒரு இந்திய பாரம்பரிய தாளவாத்தியத்தை எடுத்துச் செல்லலாம். மேல் நாட்டு இசைக்கருவிகள் மற்றும் ஒலி பெருக்கி (Amplifier) ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.

கூடுதல் விவரங்களுக்கு https://thaipusam.sg/ என்ற இணைய பக்கத்தை சென்று பார்க்கலாம்.