சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் சர்வதேச பண நிதியத்தின் (IMF) தலைவராக பதவி ஏற்க வாய்ப்பு ?

The head of the International Monetary Fund (IMF), Christine Lagarde, is stepping down. Tharman is a rumoured candidate for head of IMF

சர்வதேச பண நிதியத்தின் தலைவர் (IMF) கிறிஸ்டின் லகார்ட் தன் பதவியைவிட்டு வெளியேறி ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இதனை அடுத்து அவருக்குப் பிறகு IMF நிதியத்தின் தலைவராக பொறுப்பேற்பவர் ஆசியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம்? என்ற கணிப்புகள் உருவாகியுள்ளது.

இதில் தமிழரான சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அவர்கள் IMF நிதியத்தின் தலைவராக வருவதற்கு அதிக சாத்திய கூறுகள் இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கையில், IMF தலைமை பொறுப்பிற்கு தர்மன் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இறுதிபட்டியல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னே, மெக்சிகோவைச் சேர்ந்த IMF முன்னாள் நிர்வாக இயக்குநர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், எகிப்தைச் சேர்ந்த பிம்கோவின் முன்னைய தலைமை நிர்வாகி திரு முகம்மது எல்-எரைன் ஆகியோர் முன்மொழிதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.