சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் Chancery Court தனியார் வீடமைப்புப் பகுதி வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கான மாற்று இடமாக அறிவிப்பு..!

Chancery Court Private Housing Area located at 36 Dunearn Road, owned by Far East, has been announced as an alternative location for foreign workers to stay.
Chancery Court Private Housing Area located at 36 Dunearn Road, owned by Far East, has been announced as an alternative location for foreign workers to stay. (Photo: Google Street View)

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கான மாற்று இடமாக Far East நிறுவனத்துக்குச் சொந்தமான 36 டன்யர்ன் (Dunearn) ரோட்டில் அமைந்துள்ள Chancery Court தனியார் வீடமைப்புப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிப் பரவல் நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குக் கைகொடுக்கும் நோக்கில் அந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், சுமார் 1,200 ஊழியர்கள்வரை தங்கமுடியும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மேலும் 425 பேர் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

கிருமித்தொற்றுக்கு ஆளாகாத, அத்தியாவசியச் சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கு தங்கவைக்கப்படுவர். உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நில ஆணையம் அந்தத் தகவலை CNAஇடம் தெரிவித்ததாக செய்தி குறிப்பிட்டுள்ளது. ஊழியர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களும் உணவும் வழங்கப்படுவதாக ஆணையம் தெரிவித்தது.

ஊழியர்கள், வேலைக்குச் சென்றுவரத் தேவையான போக்குவரத்து வசதிகளையும் முதலாளிகள் செய்துதருவர். அதோடு அதிரடித் திட்டத்தின் விதிமுறைகளும் அங்கு பின்பற்றப்படும், இவ்வாறு செய்தி மீடியாகார்ப் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் இருந்து இந்தியா புறப்படும் விமானங்களில் முதன்மை பட்டியலில் தமிழகம் இல்லை – அடுத்து எப்போது..!

Related posts