உலகில் மிக வயதான தலைவர் மலேசிய பிரதமர் “மகாதீர் முகமது – 94” ஒரு சிறப்பு பார்வை!

The oldest prime minister in the world, Tun Dr Mahathir Mohamad Now 94.!

உலகில் மிக வயதான பிரதமர் என்ற பெருமையை பெற்ற மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது அவர்கள் கடந்த ஜூலை 10 ஆம் தேதி 94 வது பிறந்த நாளை அடைந்தார்.

‘டாக்டர் எம்’ என அன்போடு அந்நாட்டு மக்களால் அழைக்கப்படும் மகாதீர் முகமது அவர்கள் 1925 ஆம் ஆண்டு ஜூலை 10ம் தேதி பிறந்தார். ஆரம்ப கால கட்டத்தில் கல்லுாரி படிப்பை முடித்த பிறகு, ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.

முதன் முதலில் அரசியலில் தன்னை 1946 ஆம் ஆண்டு ஐக்கிய மலேசிய தேசிய கழக கட்சியில் இணைத்து கொண்டார். 1964 ஆம் ஆண்டு மலேசிய பார்லிமென்ட்டுக்கு தேர்வு ஆனார்.

பின்னர், 1969ல் அக்கட்சியில் இருந்து விலகி, 1972ல் மீண்டும் சேர்ந்தார். 1973ல் மலேசிய பார்லிமென்ட் செனட்டரானார். 1974ல் அமைச்சரானார். அதன் பின்னர் 1976-81 வரை துணைப்பிரதமராக இருந்தார்.

1981 ஜூலை 16ல் மலேசியாவின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றார். கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம், உள்துறை, நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் மலேசியா நவீனமாக்கப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, 1998ல் துணைப்பிரதமராக இருந்த அன்வர் இப்ராகிமை பதவி நீக்கம் செய்தார், அதன் பிறகு அப்துல்லா அகமது பதாவியை, இவர் துணைப்பிரதமராக்கினார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில், தனது தாய் கட்சியையே எதிர்த்து, வரிஸ்டான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த கூட்டணி 121 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மகாதீர் முகமது மீண்டும் பிரதமராக பதவி உயர்வு பெற்றார். உலகில் மிக வயதான பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்ற ஒரே தலைவர் இவர் ஆவார்.