சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட 558 நபர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்பு..!

The total number of infections in Singapore now stands at 5,050, with 11 deaths. 
The total number of infections in Singapore now stands at 5,050, with 11 deaths

சிங்கப்பூரில் நேற்று (ஏப்ரல் 17) நண்பகல் நிலவரப்படி, மருத்துவமனையிலிருந்து மேலும் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 708ஆக உள்ளது என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 623 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

புதிதாக 623 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 5,050ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 69 சதவீதம் முன்னர் அடையாளம் காணப்பட்ட நோய்த்தொற்றுக் குழுக்களுடன் தொடர்புடயவை, மீதமுள்ள சம்பவங்களுக்கு தொடர்பு கண்டறிதல் நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

இதில் மொத்தம் 558 புதிய பாதிக்கப்பட்ட நபர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருந்தவர்கள். மேலும், வேலை அனுமதி பெற்ற 37 நபர்கள் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சமூக அளவில் 27 பேருக்கும், வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த ஒருவருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரைட் விஷன் மருத்துவமனையில் செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 வயதான அந்த பெண் மலேசிய நாட்டை சேர்ந்தவர், மேலும் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 8 வரை தனது சொந்த நாட்டில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய (ஏப்ரல் 17) நிலவரப்படி, நோய்த்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : விதிமுறைகளை மீறி லாரியில் ஊழியர்களை ஏற்றிச்சென்ற 28 முதலாளிகளுக்கு தலா $1,000 அபராதம்..!