திருக்குறள் புனிதமானதா..? அல்லது மதச்சார்பற்றதா..? ; சுவாரசியமான விவாதம்!!

Thirukkural: Sacred or Secular?

உலகப் பொது மறை திருக்குறளின் ஆங்கில விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உங்களை, சிங்கப்பூர் தமிழ் பண்பாட்டு மையம் (CSTC) அழைக்கிறது.

தமிழ் நூல்களில் மிகச் சிறந்த நூலாக கருதப்படும் திருக்குறள், மனித வாழ்க்கையை வெளிப்புறமாகவும், உட்புறமாகவும் எவ்வாறு வாழ வேண்டும், என்பதற்கேற்ப பல ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது.

திருக்குறள் இயற்கையாகவே ஒரு மதச்சார்பற்ற நூலா? அல்லது இயற்கையாகவே மதச் சார்புடைய நூலா? மதமாக இருந்தால், அது எந்த மதத்தை குறிக்கிறது? இது போன்ற சுவாரசியமான விவாதங்கள் நடைபெற உள்ளது.

இந்தக் கேள்விகளை ஆராயவும், இவற்றைப் பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் 3 முக்கிய சிந்தனைத் திறன் உடைய தலைவர்கள் பங்கு கொள்கின்றனர். அவர்கள்;

1. பேராசிரியர் எஸ். தின்னப்பன், சிங்கப்பூரில் முன்னணி தமிழ் அறிஞர்.

2. திரு. சபரத்னம் ரத்னகுமார், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

3. திரு. சுப்பிரமணியம் நடேசன், கல்வி அமைச்சகத்தில் தமிழில் முதன்மை ஆசிரியர்.

இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 6.30 வரை, The POD (Level 16), The National Library இல் நடைபெறும்.

இப்போதே பதிவு செய்யுங்கள்: Tinyurl.com/thirukkural2019 என்ற இணையதளத்தில்.