தித்திக்கும் தீபாவளி பலகாரத்தை தயார் செய்து வீடியோவாக எடுத்து அனுப்புமாறு லிஷா அழைப்பு!

Photo: Lisha Official Facebook Page

வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை லிஷா அமைப்பு (Lisha) செய்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா உள்ளிட்ட முக்கிய இடங்கள் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. அத்துடன் நாள்தோறும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்தளித்த தமிழக நிதியமைச்சர்!

அந்த வகையில், லிஷா பெண்கள் குழு (Lisha Women’s Wing) சார்பில் தித்திக்கும் தீபாவளி பலகாரம்- 2022 (Thittikum Deepavali Sweets 2022) என்ற போட்டியை அறிவித்துள்ளது. இந்த போட்டியில் பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். இந்திய வகை பலகாரங்களை எப்படி தயார் செய்யப்படுகிறது என்பது குறித்து விடியோவாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த வீடியோ ‘Horizontal’ வடிவில் இருக்க வேண்டும். வீடியோ இரண்டு நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். வரும் அக்டோபர் 9- ஆம் தேதிக்குள் வீடியோவை அனுப்ப வேண்டும். இந்த வீடியோவை +65 9127 8054 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

சிங்கப்பூரில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்… மருத்துவமனையில் அனுமதி

https://www.deepavali.sg/…/2022/thittikum-deepavali-sweets என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைக் குறிப்பிட்டு, வீடியோவைப் பதிவேற்றம் செய்து பின்னர் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.