COVID-19: இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த 3 பேர் நோய்த்தொற்றால் பாதிப்பு..!

சிங்கப்பூரில் நேற்றைய (ஜூலை 3) நிலவரப்படி, புதிதாக 169 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 44,479ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை 60,000 குறைந்துள்ளது – மனிதவள அமைச்சர்..!

புதிய சம்பவங்களில், 11 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 8 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூவர் இதில் அடங்குவர், அதாவது அவர்கள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

கடந்த ஜூன் 21 அன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு, இரண்டு சிங்கப்பூரர்களும் ஒரு நிரந்தரவாசியும் திரும்பியதாக MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்தபின் அவர்கள் 14 நாள்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இருந்தனர்.

அவர்கள் சிங்கப்பூர் வந்தபோது நோய்க்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை, மேலும் அவர்கள் கட்டாய உத்தரவில் இருக்கும் போது அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையும் படிங்க : தெம்பனீஸ் சாலையில் விபத்து – 6 வயது சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg