LRT நிலைய லிப்ட் பொத்தான்களில் எச்சில் துப்பிய விவகாரம்; மூன்று நபர்களிடம் விசாரணை..!

spittle on LRT station lift buttons
Three teenagers being investigated over spittle on LRT station lift buttons (Photo: SBS Transit)

செங்காங்கில் உள்ள ரூம்பியா LRT நிலையத்தில், லிப்ட் பொத்தான்கள் எச்சில் துப்பிய நிலையில் காணப்பட்டது. இதை அடுத்து சந்தேகத்தின் பேரில் 15 வயதுடைய மூன்று டீனேஜ் சிறுவர்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

போலீஸ் செய்தி (பிப்ரவரி 22) வெளியீட்டில், கடந்த வியாழக்கிழமை லிப்ட் பொத்தான்கள் எச்சில் துப்பிய நிலையில் காணப்பட்டதாக தங்களுக்கு அறிக்கை கிடைத்ததாகக் சிங்கப்பூர் போலீஸ் படை கூறியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 – டாக்ஸி ஓட்டுநர் உட்பட மேலும் 2 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கேமராவில் பதிவான படங்களின் உதவி மூலம், அவர்களின் அடையாளத்தை காண முடிந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஆபரேட்டர் எஸ்.பி.எஸ் டிரான்சிட் (SBS Transit) கடந்த வியாழக்கிழமை , இந்த சம்பவம் தொடர்பாக போலீசிடம் புகார் செய்ததாக பேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.

புதன்கிழமை மாலை 6.10 மணியளவில் இளைஞர்கள் அந்த லிப்ட் பொத்தான்களில் எச்சில் துப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவிற்கு மருத்துவப் பொருள்களை அனுப்பியுள்ள சிங்கப்பூர்..!

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தற்போதைய COVID-19 சூழ்நிலையில், இதுபோன்ற சிந்தனையற்ற மற்றும் பொறுப்பற்ற செயல்களைச் செய்யும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.