சிங்கப்பூரில் வரும் மே 5 முதல் சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகளில் சிறிய மாற்றங்கள்..!

சிங்கப்பூரில் நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கைகள் வரும் வாரங்களில் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ஆனால் உள்ளூர் நோய் பரவல் இன்னும் ஒற்றை இலக்கத்தில் இல்லை என்றும் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

இதையும் படிங்க: COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 447 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!

மேலும், சில நடவடிக்கைகளும் அடுத்த வாரம் சரிசெய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வைரஸ் தொற்று உடனான போரில் வென்றது என்ற அர்த்தம் ஆகாது என்பதும் வலியுறுத்தபட்டுள்ளது.

இதில் முடிதிருத்தகம், வீட்டிலிருந்து இயங்கும் தொழில்கள் மற்றும் சலவை சேவைகள் போன்ற வணிகங்கள் மே 12 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பராம்பரியச் சீன மருத்துவர்கள் இம்மாதம் 5ஆம் தேதி முதல் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் திரு. வோங் கூறியுள்ளார்.

மேலும் சிறு குழு மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரடியாக வர அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்றும் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!