சிங்கப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர்களாக 21 முதல் 25 வயதுடைய இளைஞர்கள்!

TikTok video shows young bus captains

சிங்கப்பூரில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் இளைஞர்கள் பேருந்து ஓட்டுநராக பணிபுரிவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக பேருந்து ஓட்டுநர் என்றாலே வயதில் மூத்தவர்களாகவும், அனுபவமிக்கவராகவும் தான் இருப்பார். ஆனால், இவர்களுக்கோ 21 முதல் 25 வயது தான் ஆகிறது.

ஒரே இரவில் கோடிஸ்வரனான ஊழியர் – “என் நாட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே வேலைசெய்வேன்” என ஊழியர் பெருமிதம்

அந்நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் இந்த ஓட்டுனர்களை வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் அறிமுகப்படுத்தும் வீடியோவை TikTokல் வெளியிட்டார்.

உள்ளூர் தனியார் பேருந்து நிறுவனமான A & S Transit, தனியார் பேருந்துகளை பொதுமக்களுக்கு வாடகைக்கு வழங்குகிறது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தின் ஒன்பது இளம் ஓட்டுனர்கள் வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கால அவகாசம்… மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தான் பாதிப்பு