பாலின அறுவை சிகிச்சை செய்த கைதியை எந்த சிறையில் அடைப்பது? – ஆண்கள் சிறையிலா? மகளிர் சிறையிலா?

JUDGEMENT
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அணிஸ்லாக் மிக்கோ என்பவர் ஏமாற்ற முயற்சித்தல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை அபகரித்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் நவம்பர் 21 அன்று ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.தண்டனையின் போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவருக்கு 367.32 சிங்கப்பூர் டாலர்களை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.னிஸ்லாக் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.அனிஸ்லாக்கின் தாயாருக்கு மருத்துவப் பிரச்சனை இருப்பதால் நீதிமன்றத்தில் அழுததாகவும் கூறப்படுகிறது.

அணிஸ்லாக் செப்டம்பர் மாத இறுதியில் பாங்காக்கிற்குச் செல்ல முயற்சி செய்தபோது சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த அணிஸ்லாக் எந்தப் பாலின சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து குழப்பம் இருப்பதாக நீதிபதியிடம் அரசுத் தரப்பில் கேட்கப்பட்டது.
அனிஸ்லாக்கின் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை குறித்த ஆவணங்களைச் சேகரிப்பதாகக் கூறிய நீதிபதி,அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறைச்சேவைக்கு உத்தரவிட்டார்.