மே 1 முதல் சிங்கப்பூர் வரும் பயணிகள் இந்த அனுமதி அட்டையை பயன்படுத்தலாம்!

Singapore travel
(Photo: AFF/Roslan Rahman)

விமானம் மூலம் சிங்கப்பூர் வரும் பயணிகள் மே 1 முதல் சர்வதேச விமான போக்குவரத்து சங்க (IATA) பயண அனுமதியை பயன்படுத்த முடியும்.

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) மற்றும் IATA ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்படுமா?

COVID-19 சோதனைகளின் டிஜிட்டல் சான்றிதழ்கள் மூலம் தடையற்ற மற்றும் பயணத்தை எளிதாக்க CAAS மற்றும் IATAக்கு இடையிலான தொடர் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இது உள்ளது என அவைகள் கூறியுள்ளன.

IATA டிராவல் பாஸ் (IATA travel pass) என்பது ஒரு மொபைல் செயலியாகும், அதில் பயணிகள் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து தங்கள் COVID-19 சோதனை முடிவுகளைப் பெற்று சேமித்து வைத்துக்கொள்ள பயன்படுத்தலாம்.

டிராவல் பாஸ் செயலி தொடர்பான சோதனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக, அந்த முயற்சியை மேற்கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் 2022ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்!