பெரிய மரம் ஒன்று விழுந்ததில் சிக்கிய மூன்று பேர் – மீட்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி !

tree fall

உளு பாண்டன் சமூகக் கழகத்தின் அருகே ஆகஸ்ட் 20 அன்று பெரிய மரம் ஒன்று விழுந்ததில் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விழுந்த மரத்தின் கீழ் இரண்டு பேர் சிக்கியிருந்தனர், மற்றொரு நபர் மரத்தின் அருகே காயப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். நேற்று மாலை 5:55 மணியளவில் உலு பாண்டன் சமூகக் கழகத்தின் அருகே நடந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக SCDF கூறியுள்ளது.

SCDF தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவினர் (DART) மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விழுந்த மரத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்த பிறகு, SCDF மீட்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர்.

சிக்கப்பட்ட நபர்களை மீட்பதற்காக விழுந்த மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தினர். மேலும் SCDF இன் அவசர மருத்துவ நிபுணர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். அப்பகுதியில் வேறு யாரும் சிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த K9 மோப்ப நாய்கள் மூலமும் தேடியுள்ளனர்.

பின்னர் மீட்கப்பட்ட மூன்று பேரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சுயநினைவோடு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மரம் விழுந்தபோது அந்த மூன்று பேர் அந்த வழியாகச் சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது.