சிங்கப்பூர் ஸ்காட்ஸ் சாலையில் கார் மீது மரம் விழுந்து விபத்து..!

Tree falls on car at Scotts Road in front of Grand Hyatt hotel

சிங்கப்பூர் ஸ்காட்ஸ் சாலையில், கிராண்ட் ஹையட் சிங்கப்பூர் ஹோட்டலின் முன், புதன்கிழமை இன்று பிற்பகல் (நவம்பர் 20) ஒரு மரம் கார் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய வெள்ளை சுபாருவின் பின்புற விண்ட்ஸ்கிரீன் சிதைந்தது. அதிஷ்டவசமாக, கார் ஓட்டுநர் வழிப்போக்கர்களின் உதவியுடன் வெளியேற்றப்பட்டார். அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்ததது.

இதனை தொடர்ந்து, இன்று மாலை 5.30 மணியளவில், மூன்று பாதைகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டன, மேலும் மரம் விழுந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.

காரின் ஓட்டுநர் திரு. அரவிந்த் ராமன்லால் வயது 71 , ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்யிடம் கூறுகையில், “இந்த சம்பவத்திற்கு முன்னர் ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனை அடுத்து, தனது கார் ஸ்காட்ஸ் சாலையில் இருந்தபோது, ​​அது தூறலாக மாறியது” என்றார்.

“நான் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன், திடீரென்று ஒரு பெரிய சத்தம் ஏற்பட்டது, பின்னர் என்னைச் சுற்றி இருட்டாக மாறியது” என்று திரு. ராமன்லால் கூறினார்.

விழுந்த மரம் அவரது காரின் பின்புறத்தை மட்டுமே தாக்கியது, அதன் காரணமாக அவர் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.