துவாஸில் புதிய குடிநுழைவு சோதனை முறை…

துவாஸில் புதிய குடிநுழைவு சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

துவாஸ் சோதனை சாவடியில் ஒருவரின் விழிப்படலத்தையும் மற்றும் முகத்தையும் கொண்டு அவரது அடையாளத்தை உறுதி செய்யும் தானியங்கி முறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இன்று (ஏப்ரல் 15) முதல் ஆறு மாத காலம் சோதனை நடைபெறும் என ஐசிஎ (ICA) அறிவித்துள்ளது.

சோதனை வெற்றி அடைந்த பிறகு, தற்போதைய பாஸ்போர்ட் மற்றும் கட்டை விரல் ரேகை வருடும் இயந்திரங்கள் பயன்பாட்டு முறை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source – Channel News Asia