‘திருச்சி, கோவை உள்பட ஐந்து நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை’- ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஸ்கூட் நிறுவனம், குறைந்த கட்டணத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஸ்கூட் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி, கோவை, அமிர்தசரஸ், திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஐந்து நகரங்களில் சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

“அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தள்ளுபடி” – Fairprice பேரங்காடி அறிவிப்பு!

அதன்படி, வரும் மார்ச் 15- ஆம் தேதி முதல் திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் ‘VTL’ விமான சேவை வழங்கப்படும். கோவை, அமிர்தசரஸ், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்தில் இருந்தும் வரும் மார்ச் 16- ஆம் தேதி முதல் ‘VTL’ விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுளள்து.

“நாட்டின் எல்லைகளை விரைவில் திறக்க போறோம்” – கிரீன் சிக்னல் கொடுத்த நாடு

இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. விமான பயண அட்டவணை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஐந்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு ‘Non- VTL’ விமான சேவையை ஸ்கூட் வழங்கி வந்த நிலையில், தற்போது அதனை ‘VTL’ விமான சேவையாக மாற்றியுள்ளது. ‘VTL’ மூலம் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.