சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேர் கைது..!

Trio charged after being nabbed at sea for illegal entry into Singapore (Photo: SPF)

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டதாக கடலோர காவல்படை திங்களன்று தெரிவித்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள், 44 வயதான இந்தோனேசிய ஆண், 41 வயதான இந்தோனேசிய பெண் மற்றும் 39 வயதான மலேசிய ஆண் ஆகியோர் ஆவர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொங்கல் திருவிழாவையொட்டி கண்கவர் பாரம்பரிய தமிழ்க் கலை நிகழ்ச்சிகள்..!

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9.13 மணியளவில் சாங்கி கடற்கரையில் எண் அச்சிடப்படாத ஃபைபர் கிளாஸ் படகு ஒன்றை கடலோர காவல்படை கண்டுபிடித்ததாக காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து, சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த மூவரும் குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்கள் மூவர் மீதும் நேற்று காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் புதிய நிர்வாகக் குழுவுடன் ஜாவெத் அஷ்ரப் உரையாடல்!

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ஆறு மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும், மேலும் மூன்று பிரம்படிகளும் வழங்கப்படும். பெண்களுக்கு பிரம்படி கிடையாது.