இந்த நெரிசலில் சிக்கிக் கொண்டால் என்ன செய்யப் போறீங்க? – சிங்கப்பூர் தேசியதின பொது விடுமுறையின் போது சோதனைச்சாவடியில் எவ்வளவு நேரம் காத்திருக்கக்கூடுமோ!

Heavier traffic expected singapore-malaysia-land-checkpoints
சிங்கப்பூரில் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேசியதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே,வரவிருக்கும் விடுமுறை காரணமாக உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக அடுத்த சில நாட்களில் கடுமையான போக்குவரத்து எதிர்பார்க்கப்படுகிறது என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது.

 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று சிங்கப்பூரில் தேசியதினம் கோலாகலமாய் கொண்டாடவிருக்கும் நிலையில் சோதனைச்சாவடி வழியாக பயணிக்கும் வாகனங்கள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதத்தை எதிர்கொள்ள வேண்டும்.போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமலிருக்க கூடுமானவரை தங்கள் பயணத் திட்டங்களை சரிசெய்ய அறிவுறுத்தப்படுவதாக ICA தெரிவித்துள்ளது.

 

நாளொன்றுக்கு சோதனைச்சாவடியை கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகிறது.கடந்த வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 290,000ஐத் தாண்டியுள்ளது – ஏப்ரல் 1ஆம் தேதி நில எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து இதுவே அதிகபட்சம்.இது ஜூன் பள்ளி விடுமுறையின் போது ஒரு நாளைக்கு 278,000 பயணிகளின் முந்தைய வார இறுதி சாதனையை முறியடித்தது.

 

சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு தேசிய தின நீண்ட வார இறுதியின் உச்சக்கட்டத்தின் போது, ​​நிலச் சோதனைச் சாவடிகள் வழியாக காரில் புறப்படும் மற்றும் வரும் பயணிகள் போக்குவரத்தை அகற்றுவதற்கு நான்கு மணிநேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று ICA தெரிவித்துள்ளது.இந்த முறை என்ன செய்யப் போகிறீர்கள் என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள் வாகன ஓட்டிகளே!