சிங்கப்பூர் செய்திகள்

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய இருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Two imported cases returned from India
Two imported cases returned from India

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய இருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பதிவான வெளிநாட்டில் இருந்து வந்த சம்பவங்களில், இருவர் கடந்த ஜூலை 9ஆம் தேதி இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் திரு. லீக்கு வாழ்த்து தெரிவித்த சீன அதிபர்..!

சிங்கப்பூருக்கு வந்தபின் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் இருந்தபோது, அவர்கள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மற்ற புதிய சம்பவங்களில், 338 பேர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி பெற்றவர்கள்.

நேற்றைய நிலவரப்படி, மேலும் 196 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 42,737 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.

இன்னும் மருத்துவமனைகளில் 161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல், சமூகப் பராமரிப்பு வசதிகளில் 3,704 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
👉🏻 Twitter      – https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  – https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat  https://sharechat.com/tamilmicsetsg

 

Related posts