பயங்கர விபத்தில் சிக்கிய லாரி… இரு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே மரணம்

PHOTOS: SINGAPORE ROAD ACCIDENT.COM/FACEBOOK

Old Jurong சாலையில் லாரி சம்மந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரியில் பயணித்த ஊழியர்கள் என கமெண்ட் வாயிலாக புரிந்துகொள்ள முடிகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot விமானங்கள் ரத்து – SIA அறிவிப்பின் பின்னணி என்ன?

நேற்று (ஆகஸ்ட் 4) நடந்த இந்த பயங்கர விபத்தில் 17 மற்றும் 23 வயதுடைய இருவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) லாரியின் முன் இருக்கையில் சிக்கியிருந்த இரு பயணிகளைக் ஹைட்ராலிக் கருவிகளைப் பயன்படுத்தி காப்பாற்றியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

லாரி ஓட்டுனர் உட்பட 15 முதல் 20 வயதுக்குட்பட்ட 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் 25 வயதான ஓட்டுநர் மது அருந்தியும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன.

Sg Roads accident என்ற முகநூல் பக்கத்தில் அதன் வீடியோ வெளியாகியுள்ளது.

உரிமம் இல்லாமல் பணக்கடன்….கடனாளிகளுக்கு துன்புறுத்தல்; 107 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிங்கப்பூர் போலீஸ்