கனரக வாகனத்தில் இருந்து பறந்த டயர் – கார் ஒன்றை தாக்கும் காணொளி!

ROADS.sg

பான் தீவு அதிவிரைவு சாலையில் (PIE) கனரக வாகனத்தில் இருந்து உதிரி டயர் பறந்து கார் ஒன்றை தாக்கி பின்னர் சாலையில் மீது விழுந்தது.

நேற்று முன்தினம் நவம்பர் 27 அன்று, மதியம் 1:42 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு இந்தியாவில் தீவிர கண்காணிப்பு – சிங்கப்பூர் உள்ளிட்ட பயணிகளுக்கு தனிமை…

அவர் அந்த காணொளியை Roads.sg என்னும் முகநூல் பக்கத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதில் கனரக வாகனத்தில் இருந்து ஒரு டயர் நழுவி, கருப்பு கார் ஒன்றை தாக்கி பின்னர் சாலையில் உருண்டு செல்வதை காணமுடிகிறது.

இதனால் கார் சேதம் அடைந்ததாக தோன்றுகிறது, ஆனால் இதைப்பற்றிய முழு விவரம் ஏதும் கிடைக்கவில்லை.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடி – 30க்கும் மேற்பட்டோர் கைது