சர்வதேச அளவிலான முதல் உபர் ஏர் (Ubar Air) டாக்ஸி சேவை மெல்போர்ன் நகரில் துவக்கம்.!

சர்வதேச அளவிலான சோதனை உபர் ஏர் டாக்ஸி சேவை முதன் முதலாக மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கிறது.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பல மணி நேரங்கள் பயணத்திற்கு மட்டும் நாம் செலவழித்து வருகிறோம். அவற்றை குறைக்கும் வண்ணம் தொடங்கப்பட்டதுதான் இந்த உபர் ஏர் விமான சேவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உபர் ஏர் என்ற திட்டம் 2023 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

முதல் கட்டமாக இந்த திட்டம் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைமுறைக்கு வரும் என்று உபர் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இதனை அடுத்து, சர்வதேச அளவில் முதல் கட்ட சோதனை உபர் ஏர் டாக்ஸி சேவை ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது.

மேலும், ஆஸ்திரேலியா நாட்டில் அதிகாரப்பூர்வ பைலட் நகரங்களாக ‘டல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ்’ ஆகிய நகரங்களில் இருக்கும் என்று, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.