வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனம்!

underpaying foreign employees
PHOTO: Reuters

சுமார் 2 ஆண்டுகளாக, Twelve Cupcakes நிறுவனம் 7 ஊழியர்களுக்கு மொத்தம் சுமார் S$114,000 குறைவான ஊதியம் வழங்கியதாக குற்றத்தை இன்று (டிச. 10) ஒப்புக்கொண்டுள்ளது.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், 15 குற்றச்சாட்டுகள் அதன் மீது சுமத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு 3000 செட் பாரம்பரிய இந்திய இனிப்புகள் நன்கொடை!

அதே போன்ற 14 குற்றச்சாட்டுகளையும் கருத்தில் கொண்டு, அந்த நிறுவனத்தின் மீது அரசு தரப்பு S$127,000 அபராதம் கோரியுள்ளது.

இதில், புதிய உரிமையாளர்களான இந்தியாவை தளமாகக் கொண்ட துன்சேரி குழுமம் (Dhunseri Group) வெளிநாட்டு ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தியுள்ளதாக தற்காப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

புதிய நிர்வாகிகள் முந்தைய நிர்வாகத்தால் நிறுவப்பட்ட பழைய நடைமுறையைத் தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விற்பனை நிர்வாகிகள், வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள் மற்றும் சமையல்காரர் உள்ளிட்ட ஏழு ஊழியர்களுக்கு S-Pass அனுமதி வழங்கப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்கு S$2,200 முதல் S$2,600 வரை சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு S$200 மற்றும் S$1,200க்கும் இடைப்பட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான தீர்ப்பை நீதிபதி ஜனவரி மாதம் ஒத்திவைத்தார்.

சைக்கிள் மோதிய விபத்தில் இறந்த ஆடவர்… சைக்கிள் ஓட்டிய வெளிநாட்டவருக்கு சிறை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…