வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்… நிறுவனத்தின் இணை நிறுவனருக்கு அபராதம்!

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதற்காக Twelve Cupcakes நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெமி தியோவுக்கு (Jaime Teo) இன்று (மார்ச் 9) S$65,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பிரபலமும் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சிங்கப்பூருமான தியோ, Twelve Cupcakes நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளில் ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏறக்குறைய S$100,000 குறைத்து கொடுத்துள்ளார். அவர் அப்போது நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.

அவர்களுக்கு S$2,000 முதல் S$2,600 வரை சம்பளம் வழங்கப்பட வேண்டியிருந்தது.

ஆனால், நீதிமன்ற ஆவணங்களின்படி, செப்டம்பர் 2013 முதல் நவம்பர் 2016 வரை S$350 முதல் S$1,400 வரை குறைவாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தியோ, வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் 10 குற்றச்சாட்டுகளை முன்னர் ஒப்புக் கொண்டார்.

மேலும் படிக்க:

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கிய நிறுவனத்திற்கு $119,500 அபராதம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைவாக வழங்கியதை ஒப்புக்கொண்ட உரிமையாளர்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனம்!