வெளிநாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைவாக வழங்கியதை ஒப்புக்கொண்ட உரிமையாளர்

indian-origin-singapore-jailed

Twelve Cupcakes நிறுவனத்தின் முன்னாள் இணை நிறுவனர் ஜெய்மி தியோ (Jaime Teo) வெளிநாட்டு ஊழியர்களுக்கு மொத்தமாக S$100,000 சம்பளம் குறைவாக வழங்கியதாக குற்றத்தை இன்று (பிப்ரவரி 4) ஒப்புக்கொண்டார்.

அப்போது தியோ, தனது கணவர் டேனியல் ஓங்குடன் (Daniel Ong) நிறுவனத்தை தலைமை தாங்கி நடத்தி வந்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் – குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனம்!

உள்ளூர் பிரபலமான தியோ, வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

மேலும், அவர் மீது 14 குற்றச்சாட்டுகள் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கிய நிறுவனத்திற்கு $119,500 அபராதம்!

சுமார் மூன்று ஆண்டுகளில், அங்கு பணிபுரிந்த 7 வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தில் கிட்டத்தட்ட S$100,000 குறைவாக வழங்க அவர் அனுமதித்தாக கூறப்பட்டுள்ளது.

இன்றுவரை, ஊழியர்களுக்கு சுமார் S$98,900 சம்பளம் இன்னும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் சஃப்ரா யிஷூனில் கீழே விழுந்து மாணவர் உயிரிழப்பு