சிங்கப்பூரில் சட்டவிரோத கும்பல் என்ற சந்தேகத்தில் மேலும் 6 பேர் கைது!

வெளிநாட்டு ஊழியரை

சட்டவிரோத குழுக்களின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 17 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜலான் லோயாங் பெசருவில் (Jalan Loyang Besar) உள்ள ஒரு குடியிருப்பில் கோஷங்களை எழுப்புவது மற்றும் சைகை செய்வது போன்ற அந்த குழு தொடர்பாக புகார் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய பாதிப்பு!

பெடோக் காவல் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள், சம்பவ இடத்தில் நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.

அவர்கள் சட்டவிரோத குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டதாக அது கூறியுள்ளது.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கும் இணங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்காகவும் இந்த குழு விசாரிக்கப்படும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கிய நிறுவனத்திற்கு $119,500 அபராதம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

இதையும் படிங்க: சட்டவிரோத குழுக்களின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேர் கைது

இதையும் படிங்க: சிங்கப்பூரில் சட்டவிரோத குழுக்களில் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட 24 பேர் கைது!