உரிமம் பெறாத இடத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு உணவு வகைகளை தயாரித்த நிறுவனத்திற்கு அபராதம்

unlicensed food company fined
Photos: SFA & Wikipedia

சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்று, அதன் உரிமம் பெறாத இடத்தில் சட்டவிரோதமாக ச்வீ (chwee) மற்றும் கேரட் (carrot) கேக்குகளை தயாரித்ததை அடுத்து பிடிபட்டுள்ளது.

இதனை அடுத்து, அந்த உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்பு

உரிமம் பெறாததால், லோ மெங் கீ (Low Meng Kee) நிறுவனம் மீது நேற்று (ஆக. 11) S$2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூர் உணவு அமைப்பின் (SFA) அதிகாரிகள் புதிதாக புதுப்பிக்கப்பட்ட அந்நிறுவன வளாகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

SFAலிருந்து உரிமம் பெறாத நிலையில், அந்த நிறுவனம் chwee kueh மற்றும் கேரட் கேக் தயாரிப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அங்கு தயாரிக்கப்பட்ட சுமார் 3,880 chwee kueh துண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கட்டுப்பாடுகள் தளர்வு – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!