பாஸ்போர்ட் நடவடிக்கைகளை முடிக்காமல் சென்ற 4 பேர்… தடுப்பு காவலில் வைக்கப்பட்ட சோகம்

unstamped passports detained
Shin Min Daily News

சமீபத்தில் சாலை வழியாக மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிங்கப்பூரர் மற்றும் அவரது நண்பர்களுக்கு பயணம் இறுதியில் கசப்பாக முடிந்தது.

மலேசிய பயணம் முடிந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் வழியில், அவர்கள் ஜோகூர் பாருவில் சுங்க சாவடியில் பாஸ்போர்ட் நடவடிக்கைகளை முடிக்காமல் சென்றுள்ளனர்.

சிங்கப்பூரில் சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு

இதன் காரணமாக அவர்கள் ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொருவருக்கும் 3,000 ரிங்கிட் (S$930) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 25 முதல் 27 வயதுக்குட்பட்ட ஐந்து நண்பர்கள் கொண்ட அந்த குழு கடந்த மே 7 அன்று மலேசியாவிற்குச் சென்று ஜோகூர் பாரு மற்றும் கோலாலம்பூரில் ஐந்து நாட்கள் கழித்து திரும்பியதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் சிங்கப்பூர் திரும்பியதாகவும், ​​மீதமுள்ள நான்கு பேர் கடந்த மே 11 அன்று ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர்களில் ஒரு சிங்கப்பூரர், இரண்டு நிரந்தரவாசிகள் மற்றும் ஒரு மலேசியர் அடங்குவர்.

லாரி, கனரக வாகனம், உலோகக் குழாய் இடையே சிக்கிக்கொண்ட ஊழியர் – மருத்துமனையில் அனுமதி!