சிங்கப்பூரில் கடந்த 28 நாட்களில் தடுப்பூசி போடாத / முதல் டோஸ் மட்டும் போட்டுக்கொண்ட 73.4% பேர் உயிரிழப்பு

(photo: mothership)

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இவர்களில் ஐந்து சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் ஆறு சிங்கப்பூர் பெண்கள் அடங்குவர், அவர்கள் 66 மற்றும் 98 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவிடலாம், ஆனால் மனத் தேவையை எளிதில் அளந்துவிட முடியாது

அவர்களில், மூன்று பேர் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, ஆறு பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

மீதமுள்ள இரண்டு பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

மொத்தமாக, சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று காரணமாக 183 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 28 நாட்களில் இறந்தவர்களில், 26.6 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

மேலும், 73.4 சதவிகிதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

மசாஜ் நிலையங்களில் பாலியல் தொடர்பான சேவையில் ஈடுபட்டதாக 6 பெண்கள் கைது