மலேசிய முடக்கம் குறித்த அண்மைத் தகவல் மற்றும் கேள்விக்கான பதில்கள்..!

Update on Malaysia’s Movement Control Order (MCO)
Update on Malaysia’s Movement Control Order (MCO) (Photo : Straits Times)

புதன்கிழமை (மார்ச் 18) முதல் தொடங்கி சுமார் இரண்டு வாரங்களுக்கு மலேசியா குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்லவும், வெளிநாட்டினர் மலேசியாவிற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் உட்பட வெளிநாட்டு வருகையாளர்கள் யாரும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மலேசியர்கள் வெளிநாடு செல்லத் தடை; கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடல்..!

இந்நிலையில், சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் பொருட்கள், சரக்குகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் தொடர் விநியோகத்தை ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

தற்போது மலேசியாவில் உள்ள சிங்கப்பூரர்கள், முடக்கம் நடப்பில் இருக்கும் காலகட்டத்தில், அங்கிருந்து வெளியேற முடியுமா?

முடியும். ஆனால், அவர்கள் தடை உத்தரவுகளால் ஏற்படக்கூடிய சிரமங்களுக்குத் தயாராக இருக்கவேண்டும். அத்துடன், இந்த முடக்கக் காலகட்டத்தின் போது, அவர்கள் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

முடக்கம் நடப்பில் இருக்கும் காலகட்டத்தில், சிங்கப்பூரர்கள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்களா?

மலேசியாவில், “அத்தியாவசிய சேவைகளின்” கீழ் பணிபுரியாத அனைத்து வெளிநாட்டவரும் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்

முடக்கம் நடப்பில் இருக்கும் காலகட்டத்தில், மலேசியாவிலிருந்து வெளி செல்லும் விமானச் சேவைகள் இயங்குமா?

அவரவர் விமானச் சேவை நிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு : go.gov.sg/mco

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தம்..!