VTL திட்டத்தில் 3 நாடுகளுடனான பயண ஏற்பாட்டை ஒத்திவைத்த சிங்கப்பூர்

Ong Ye Kung / FB

புதிய Omicron COVID-19 மாறுபாட்டு கிருமி பரவலின் அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 நாடுகளுடனான பயண VTL பயணம் ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடனான தடுப்பூசி போட்டுகொண்டோருக்கான பயண ஏற்பாட்டை (VTL) தொடங்குவதற்கு முன் சிங்கப்பூர் ஒத்திவைத்துள்ளது.

சிங்கப்பூர் – மலேசியா இடையேயான விமானம் மற்றும் நிலவழி VTL சேவைகள் தொடக்கம்

இந்த நாடுகளுக்கான VTL சேவை, அடுத்த மாதம் டிசம்பர் 6 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் மேலும் அறிவிப்பு வரும் வரை அது ஒத்திவைக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

புதிய தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளான போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு அவை போக்குவரத்து சந்திப்பு மையங்களாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இது அமைந்துள்ளதாக MOH செய்தி வெளியீட்டில் கூறியுள்ளது.

மேலும், இந்த VTL சேவைகள் எப்போது தொடங்கும் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இந்த புதிய தொற்று மாறுபாட்டின் எந்த சம்பவமும் இதுவரை சிங்கப்பூரில் கண்டறியப்படவில்லை எனவும் அது கூறியுள்ளது.

இன்று முதல் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ‘VTL’ விமான சேவை!