வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது அரசு!

Photo: Changi Airport

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூரில் மொத்த மக்கள்தொகையில் இதுவரை சுமார் 87%- க்கும் அதிகமானோர் முழுமையாக கொரோனா தடுப்பூசியை, அதாவது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் சிங்கப்பூர் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.

ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பிய ஆயுதப்படை வீரர்கள்.!

அதேபோல், சிங்கப்பூரில் தங்கிப் பணிப்புரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது, இங்கு கொரோனா பரவல் அதிகரித்தப் போதிலும், பொதுமக்கள் அதிகளவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டது அரசுக்கும், பொதுமக்களுக்கும் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

எனினும், பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் போன்ற அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை அமைச்சகமும் கூட்டாக நேற்று (11/09/2021) வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது, “வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூருக்கு வந்து கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் வந்து இறங்கிய உடனேயே அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாங்கி விமான நிலையம், தானா மேரா படகு முனையம் ஆகியவற்றின் வழியாக வரும் சிங்கப்பூரர்களுக்கு இந்த நடைமுறைப் பொருந்தும்.

உட்லாண்ட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… பூனைகளைப் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

தடுப்பூசியை செலுத்திக் கொள்பவர்கள் அடுத்த படகு அல்லது விமானத்தில் மீண்டும் வெளிநாட்டிற்குத் திரும்புவார்கள். இரண்டாம் முறை தடுப்பூசிப் போட்டுக்கொள்வதற்கு, அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வருவார்கள். எனினும், அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை.

கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள சிங்கப்பூர் வரும் சிங்கப்பூரர்களுக்கு மற்றொரு முறையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, சிங்கப்பூரர்கள் இங்கு வந்திறங்கியவுடன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டு, அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் தனிமைப்படுத்தும் காலத்தை நிறைவேற்றுவார்கள்.பின்னர், தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் போட்டுக் கொள்வதற்கான நேரம் வரும்போது, அதைப் போட்டுக் கொண்டு மீண்டும் தங்கள் வசிக்கும் நாட்டிற்கு திரும்புவர். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு go.gov.sg/vaccinationchannels என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம். வெளிநாட்டு வாழ் சிங்கப்பூரர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள https://form.gov.sg/#!/613b72eb1d95210012ae52f2  என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.” இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.