அடடே!என்ன ஒரு அருமையான காட்சி! – சிங்கப்பூரில் அண்ணாந்து வானத்தைப் பார்த்தீர்களா!

van-gogh-sky-tampines
ஆகஸ்ட் 11,2022 அன்று இரவு சிங்கப்பூரில் வானத்தை அண்ணாந்து எத்தனை பேர் கவனித்தீர்கள்?வானத்தைப் பார்க்காதவர்களில் நீங்களும் ஒருவரா?கவனிக்கத் தவறியவர்கள் இந்தப் புகைப்படத்தை பார்த்தால் மனதில் இனிமையை உணர முடியும்.ஆம்! ஒருவர் வானத்தை டாம்பைன்ஸில் இருந்து புகைப்படம் எடுத்தார்.

வானத்தில் பிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சந்திரனை மேகத் திரள்கள் சூழ்ந்திருந்தன.இந்த அழகியக் காட்சி இரவு 9:40 மணி முதல் 10:30 மணி வரை இருந்தது.இந்த புகைப்படம் முகநூலின் CloudSpotting & SkySpotting Singapore குழுவில் வெளியிடப்பட்டது.
அதே காட்சியை மற்றொரு நபர் டெபன் கார்டனில் இருந்து படம் பிடித்த போது வானம் பஞ்சுபோன்ற அல்டோகுமுலஸ் மேகங்களால் மூடப்பட்டிருந்தது என்பது சிறந்த காட்சி.

இந்த வகையான மேகங்கள் மழையைத் தருவதில்லை, நீர்த்துளிகள் மற்றும் பனி படிகங்கள் இரண்டையும் கொண்டிருக்கும்.ஆனால் அவை பெரும்பாலும் வானிலையில் வரவிருக்கும் மாற்றத்தைக் குறிப்பதாக தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் (NEA) வானிலை ஆய்வு சேவை சிங்கப்பூர் (MSS) தெரிவித்தது.