இந்தியா செய்திகள் சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

Vande Bharat Mission Phase 5 Schedule of flights from Singapore
(Photo: India in Singapore/Twitter)

வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 5ஆம் கட்டமாக சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை இந்திய அரசு தொடங்கி அதை கட்டம் கட்டமாக செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் இருந்தும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஊட்டச் சத்து மிக்க அரிசி – தினசரி 12,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கல்..!

தூதரகம் வெளியிட்டுள்ளன பட்டியலில், தமிழகத்திற்கு அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் விமானங்கள் இடம் பெற்றுள்ளன.

பயணிகள் அனைவருக்கும் தமிழகம் சென்றதும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தங்களால் கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்க முடியாதவர்களுக்காக, தமிழக அரசு இலவச தங்குமிடங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு : https://www.hcisingapore.gov.in/

இதையும் படிங்க : “அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
👉🏻 Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
👉🏻 Twitter      – https://twitter.com/tamilmicsetsg
👉🏻Telegram  – https://t.me/tamilmicsetsg
👉🏻 Sharechat  https://sharechat.com/tamilmicsetsg

Related posts