சிங்கப்பூரர்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் வரை இந்த நாட்டுக்கு ஜாலியா போகலாம்..!

Changi Airport Facebook

கோவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் அக். 11, முதல் தளர்த்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் நடந்தசெய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சிங்கப்பூரில் இறந்து கிடந்த செய்தித்தாள் போடும் ஊழியர் – போலீஸ் விசாரணை

தனிப்பட்ட வருகையாளர்கள் யாராக இருந்தாலும் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார் அவர்.

மேலும், தொற்றுநோய்க்கு முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவைகள் அகற்றப்படும், தினசரி பயணிகள் வருகைக்கான வரம்பும் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19க்கு முன், அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட 68 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வருபவர்களுக்கு விசா இல்லாமல் 90 நாட்கள் வரை தங்குவதற்கு ஜப்பான் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 5வது மாடியில் இருந்து கீழே குதித்த பெண்… மருத்துவமனையில் அனுமதி