இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்? – சிங்கப்பூர் நிர்வாகத் திறனை ஆராயும் பிரேசில்

Vivian Balakrishnan with Brazilian Governors
Vivian Balakrishnan with Brazilian Governors

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருமான விவியன் பாலகிருஷ்ணன் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளதாவது, “பிரேஸிலின் பேரணம்புகோ, சியரா, ரியோ டோ சுல், செர்ஜிப் மற்றும் சா பௌலோ மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் எனது காலை உணவு முடிவுற்றது.

அவர்கள் அனைவரும் லெமன் அறக்கட்டளையுடன் இணைந்து, நமது பொது சேவை மற்றும் கல்விக் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்ய சிங்கப்பூர் வந்துள்ளனர்.

நாம் 2012ல் பிரேசிலியாவில் நமது தூதரகத்தைத் திறந்ததிலிருந்து, இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புகள் குறித்த வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்கிறோம்.

நமது உறவுகள் மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை வலுப்படுத்த நாம் கைக்கோர்த்து மேலும் பல பணிகளை செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொண்டோம்.” என்று பதிவிட்டுள்ளார்.