பிரிந்து வாடும் குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் VTL சேவை

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டவர்களுக்கு
Unsplash / Matt Seymour

கோவிட்-19 காரணமாக சுமார் இரண்டு வருடங்களாகப் பிரிந்திருந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் நிலவழி VTL பேருந்துகள் இன்று காலை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் சாலைகளில் வலம் வந்தன.

இருநாட்டு பயணிகளும் அவரவர் உறவுகளை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தது குறித்தும் சமூக ஊடகங்களின் வாயிலாக காண முடிகிறது.

நில வழியிலான VTL தொடங்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குள் நுழையும் பயணிகளிடையே ஒருவருக்கு கோவிட்-19 “பாசிட்டிவ்” கண்டறியப்பட்டதாக மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடி – 30க்கும் மேற்பட்டோர் கைது

இதற்காக தான் புறப்படுவதற்கு முன் (PDT) மற்றும் வருகையின்போதும் சோதனை (OAT) மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

எல்லைகளை பாதுகாப்பாக மீண்டும் திறக்கும்போது, தொற்று பாதிக்கப்பட்ட நபர்களும் நுழைவார்கள். ஆகையால், இடர் மதிப்பீடு, தனிமைப்படுத்துதல் மற்றும் நெருங்கிய தொடர்புகளைக் கண்காணிக்கும் விதிமுறைகளும் வழக்கமாகும் என அவர் கூறினார்.

முன்னெச்சரிக்கையாக, நில வழி VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள், புறப்படுவதற்கு முன் சோதனை செய்து, வந்தவுடன் நெகட்டிவ் சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய Covid-19 Omicron மாறுபாட்டின் அச்சம் காரணமாக, நிலம் சார்ந்த VTL பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் இரண்டாவது ART சோதனை மேற்கொள்ள வேண்டும்.

VTL திட்டத்தில் 3 நாடுகளுடனான பயண ஏற்பாட்டை ஒத்திவைத்த சிங்கப்பூர்