Breaking: சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு எளிமையாகும் சோதனை கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

தடுப்பூசி போடப்பட்ட பயண ஏற்பாடுகள் (VTL) மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் இனி ஒவ்வொரு நாளும் ART சோதனைகளை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

அதாவது, பயணிகள் தங்களுடைய ART சோதனை முடிவுகளை அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட லிங்க் இணைப்பின் மூலம் இனி சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

“சிங்கப்பூரில் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதே முக்கிய நோக்கம்” – வேலையிடத்தில் காயமடைவதை தடுக்க புதிய முயற்சி

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர், கோவிட்-19 “நெகடிவ்” முடிவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த புதிய நடைமுறை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24) முதல் நடப்புக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயணிகள் அவர்கள் வருகையின் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை சுயமாக ART சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பினால் மட்டுமே, அந்த சோதனை முடிவு நெகடிவ் ஆக இருக்க வேண்டும்.”

மறுபுறம், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணிக்கு முன் வரும் VTL பயணிகள் ஏற்கனவே இருக்கும் சோதனை நடைமுறையைத் தொடர வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

சுமார் 100,000 பேர் VTL வழியாக சிங்கப்பூர் வருகை.. டிக்கெட் விற்பனை 50% குறைக்கப்படும்