சிங்கப்பூரில் வயதானோருக்கு முதலில் விநியோகிக்கப்படும் TraceTogether கருவிகள்..!

COVID-19: Vulnerable seniors to receive first batch of TraceTogether tokens from Jun 28
COVID-19: Vulnerable seniors to receive first batch of TraceTogether tokens from Jun 28 (Photo: Mothership)

COVID-19 தொற்றில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய முதியோருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) முதல் TraceTogether கருவிகளின் முதல் தொகுதி வழங்கப்படுகிறது.

தற்போது டிஜிட்டல் முறையில் இணைக்கப்படாத முதியோருக்கு நேற்று முதல் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏறக்குறைய 5 மாதங்கள் மருத்துவமனையில் போராடி குணமடைந்த வெளிநாட்டு ஊழியர் – தன் பிறந்த குழந்தையை காண ஆர்வம்..!

அந்த கருவி எப்படி இயங்கும்?

அது QR குறியீட்டைக் கொண்டிருக்கும்.

Bluetooth மூலம் இயங்கும் அந்த கருவியானது அருகிலுள்ள மற்ற TraceTogether கருவிகள் அல்லது TraceTogether செயலியை உடைய கைத்தொலைபேசிகளுடன் தொடர்பில் இருக்கும்.

அந்த கருவியில் சுமார் 25 நாள்களுக்கு தகவல்கள் பதிவாகியிருக்கும் என்று SNDGG தெரிவித்துள்ளது.

அந்த கருவியில் GPS தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி தொடர்பு ஏதும் இருக்காது. அதில் பதிவான தகவல்களைத் தொலைவிலிருந்து யாரும் பதிவிறக்கம் செய்யமுடியாது.

(Illustration: Smart Nation and Digital Government Group)

COVID-19 தொற்று உறுதியானவருடன் தொடர்பில் இருந்தது அடையாளம் காணப்பட்டால் மட்டும், சுகாதார அமைச்சகம் (MOH) தொடர்புகொள்ளும்.

TraceTogether கருவி லேசானதாகவும், எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் முஸ்தஃபா சென்டர் உள்ளிட்ட இடங்கள் வெளியீடு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg